”என் கண்களில் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை”…ஒரு தங்கைக்கு இயக்குநர் சேரனின் கடிதம்…

”என் கண்களில் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை”…ஒரு தங்கைக்கு இயக்குநர் சேரனின் கடிதம்…

மூன்று மாதமாக, விடுதிக்குப் பணம் கட்டாததால்,விடுதியிலிருந்து வார்டன் என்னை வெளியேற்ற….எங்கு போவது எனத் தெரியாமல், வழியும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல்,தள்ளாடியபடி தன் நடந்து சென்ற நிலையில் இயக்குநர் சேரன் சார் செய்த உதவியை தன் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன்’ என்று கவிஞரும் பேச்சாளருமான சுமதிஸ்ரீ நேற்று தனது முகநூலில் மீண்டும் போட்ட பதிவுக்கு கண்ணீர் வழிய பதில் எழுதியிருக்கிறார் சேரன்.

இதோ அந்தப் பதிவு…இயக்குனர் சேரன்,என் முகநூல் பதிவில்,கமெண்ட் போட்டுள்ளார்…?

(தொலைபேசியில் அழைத்தவர்,உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும்,தனக்கு போன் வருவதாக சொன்னார்)

சுமதிக்கு சேரன் அன்புடன் எழுதுவது.. 
இதோடு எத்தனையோ முறை இந்த நிகழ்வை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்… இன்னும் உங்களுக்குள் அந்த நன்றிப்பசி தீரவில்லை.. போதாக்குறைக்கு நிறையப்பேருக்கு உதவி செய்து தீர்க்க நினைக்கிறீர்கள்.. அப்படியும் தீரவல்ல கொடிய பசியாய் அது மாறியிருக்கிறது..பெருமை எனக்கல்ல…

ஒரு இரவில் ஒரு இளம்பெண் எங்கே போவது எனத்தெரியாமல் நிற்கும்போது இரண்டு தங்கைகளோடு பிறந்த அண்ணனாக தவித்த நான் உடனே ஒரு தங்கைக்கு செய்த சிறு உதவிதான்…உன்னை இவ்வளவு நாட்கள் நல்ல மனிதாபிமானத்துடன் அந்த உதவி நடக்கவைத்திருக்கிறது என்ற கர்வம் தவிர வேறு எந்த சந்தோசமும் இல்லை தங்கையே…

ஏனெனில் எனக்கு இந்த நன்றி சொல்லும் வாய்ப்பை இறைவன் கொடுக்கவில்லை…. உன்னைப்போல நானும் இந்த சென்னை வீதிகளில் பரிதவித்து பசியோடு நடந்த நாட்களில் எத்தனை உள்ளங்கள் என் பசிதீர்த்தது தெரியுமா… அந்தக்கண்கள் இன்னும் என் கன்முன்னே நிற்கிறது…அவர்கள் முகம் திரும்பக்காண எனக்கு வாய்ப்பு அமையவில்லை.. 

cheran

எனவே என்னால் இயன்ற எந்த உதவிகளையும் அந்த காலக்கட்டங்களில் நான் மறுத்ததில்லை… காலத்தில் செய்யும் உதவி கூட நல்ல விதைபோலத்தான்.. அது நிறைய கருணைமிக்க மனிதர்களை உருவாக்கும்… அந்த வகையில் இன்றும் சகோதரனாக உன்னை பார்த்து சந்தோசம் கொள்கிறேன்.. நீ எழுதிய வரிகளை படிக்க படிக்க என் கண்களில் கண்ணீர் வழிவதை நிறுத்தமுடியவில்லை… 

ஏன் தெரியுமா… நன்றி கெட்ட சமூகம் என கோவப்பட்டு கிடந்த நேரம் உன் கட்டுரை வருகிறது….நன்றி.நீண்டநாள் இதே பெண்ணாய் வாழ வேண்டும்..
அன்புடன்
சேரன்.

இதையும் படிங்க: பேட்டியில் கண் கலங்கிய சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா?