“என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வையுங்கள்” : மருத்துவர் சைமனின் மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்!

 

“என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வையுங்கள்” :  மருத்துவர் சைமனின் மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்!

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். 

2 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராகவும், நரம்பியல் நிபுணருமான சைமன் ஹெர்குலஸ் எனும் மருத்துவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். 

TT

30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த  மருத்துவரின்  உடலை  அடக்கம்  செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் கொரோனாவால் இறந்தவர் உடலை இங்கு  அடக்கம் செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதோடு மருத்துவர் உடலை கொண்டு வந்த ஆம்புலன்சை  மிக மோசமாக தாக்கி அதன் ஓட்டுனரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து இறந்த மருத்துவரின் உடல் வேளங்காடு மயானத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல்,புதைக்கபட்டது. இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

TT

இந்த சம்பவத்தில் போலீசாரை பணிசெய்ய விடாமல் போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

TT

இந்நிலையில் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சைமன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில். “தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை.

TT

எனது கணவர் எங்களுடன் கடைசியாக பேசிய வீடியோகாலில், ஒருவேளை நான் மீண்டு வரவில்லை என்றால், கிறிஸ்துவ மதச் சடங்குகளின்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யுமாறு கூறினார். இதனால், எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும். என் கணவர் உடலை எடுத்து மீண்டும் கீழ்பாக்கத்தில் புதைக்க வேண்டும்.

நான் இரண்டு பிள்ளைகளுடன் விதவையாக நிற்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். என் கணவரின் ஆசையை நிறைவேற்றுங்கள் என்று வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார்.