”என் ஓய்வுக்கு இந்த 2 பேர்தான் காரணம்” பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ஓப்பன் டாக்

 

”என் ஓய்வுக்கு இந்த 2 பேர்தான் காரணம்” பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ஓப்பன் டாக்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கூறியிருக்கும் முக்கியமான தகவர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இளம் வீரர் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்திக்கொண்டிக்கையில் அதுவும் பல மூத்த வீரர்கள் அவரின் பவுலிங் திறமையை மெச்சிக்கொண்டிருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

பாகிஸ்தான் கிரிகெட் அணியின் நம்பிக்கை அளிக்கும் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது அமீர். 2009 ஆண்டில்தான் தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். அப்போது அவருக்கு 17 வயதுதான். பலரும் வியக்கும் விதத்தில் அவரின் பந்து வீச்சு இருந்தது.

”என் ஓய்வுக்கு இந்த 2 பேர்தான் காரணம்” பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ஓப்பன் டாக்

இதுவரை அமீர் டெஸ்ட் போட்டிகளில் 119, ஒருநாள் போட்டிகளில் 81, டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தீருக்கிறார். இடையில் அமீர் மீது சூதாட்ட புகார் அளிக்கப்பட்டதால் சில ஆண்டுகள் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் மீண்டு வந்த அவர் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஆனால், திடீரென்று சென்ற வாரத்தில் ஒருநாள் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அதற்கான காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன்னை மோசமாக நடத்தியதைக் குறிப்பிட்டிருந்தார்.

”என் ஓய்வுக்கு இந்த 2 பேர்தான் காரணம்” பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ஓப்பன் டாக்

இப்போது அவர் அதிர்ச்சி தரும் வகையில் தனது ஓய்வுக்கு இரண்டு பேர்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒருவர் பாகிஸ்தானின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக். மற்றொருவர் தற்போதைய பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ். இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் அமீர்.

இருவரும் என் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டதோடு, எனக்கான அழுத்தத்தையும் தரும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும்  அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவரின் தர்பபில் ஏதும் மறுப்பு  இதுவரை தெரிவிக்க வில்லை.