என் ஓட்டு இவருக்கு தான்: பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து ரியோ பதிவு!

 

என் ஓட்டு இவருக்கு தான்: பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து ரியோ பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்பது குறித்து ரியோ பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்பது குறித்து ரியோ பதிவு வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவரை வெளியேற்றும் படலம் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேறினார். அதைத்தொடர்ந்து இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மோகன், சரவணன், வனிதா, மதுமிதா மற்றும் மீரா ஆகியோர் உள்ளனர். 

இதில் மக்கள் மனதில் வெறுப்பைச் சம்பாதித்த வனிதா தான் வெளியேற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இந்த லிஸ்டில் தனது விருப்ப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கவனமாக ஓட்டு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரியோ தான் யாருக்கு ஓட்டு அளித்துள்ளேன் என்பது குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘சித்தப்பு சரவணனுக்கே என்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.