என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு ஏன் – ஆ.ராசா விளக்கம்!

 

என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு ஏன் – ஆ.ராசா விளக்கம்!

இந்தியாவுக்கு எதிராக குற்றம் வெளிநாட்டில் நடந்தாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்கு பதிவது, மேற்படிக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது ஆகியவை மட்டுமே இந்த சட்டத்திருத்தத்தில் உள்ளதாக ஆ. ராசா தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்ட திருத்தத்தை திமுக ஆதரித்தது குறித்து சமூக வளைதலங்களில் தவறான தகவல்கள் பரப்பப்ப‌டுவதாக அக்கட்சியின் எம்.பி. ஆ. ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் ​தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் ஆ.ராசா சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியை போல் திமுகவை சித்தரிப்பதை கண்டிப்பதாக ஆ.ராசா கூறியுள்ளார்.

A Raja

இந்தியாவுக்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபடும் எவர்மீதும் ​தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பாயும். இந்தியாவுக்கு வெளியில் சென்று விசாரிக்கும் சிறப்பு உரிமைகளை அதிகாரிகளுக்கு தருவது, இந்தியாவுக்கு எதிராக குற்றம் வெளிநாட்டில் நடந்தாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்கு பதிவது, மேற்படிக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது ஆகியவை மட்டுமே இந்த சட்டத்திருத்தத்தில் உள்ளதாக ஆ. ராசா தெளிவுபடுத்தியுள்ளார்.