என் உயிரைக் கொடுப்பேன்- அமித்ஷா

 

என் உயிரைக் கொடுப்பேன்-  அமித்ஷா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் உயிரைக் கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பேன் எனவும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 

என் உயிரைக் கொடுப்பேன்-  அமித்ஷா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் உயிரைக் கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பேன் எனவும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு குறித்து கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. மக்களவையில் காரசார விவாதங்கள் இடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் மறுசிரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் மசோத‌ மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். 

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா என ஆவேசத்துடன் அமித் ஷா வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மாற்ற முடியாது என்றும் இது அரசியல் ரீதியான நடவடிக்கை இல்லை என்றும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர்‌ என்று தாம் குறிப்பிடுவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளையும் சேர்த்துதான் எனப் பேசிய அவர் உயிரைக் கொடுத்தாவுது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கப் போவதாக தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், விரைவில் மாநிலமாகும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்