என் உடலை நானே வெறுத்தேன்: வித்யா பாலன் பேட்டி

 

என் உடலை நானே வெறுத்தேன்: வித்யா பாலன் பேட்டி

என் உடலை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன், என் உடலுக்கு நான் மரியாதை அளித்தேன். அதனால் எனக்கு நானே அழகாய் தெரிய துவங்கினேன், மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது.

மும்பை: சக மனிதனின் உடலை விமர்சிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வித்யா பாலன். இந்த படத்துக்காக தேசிய விருது பெற்ற வித்யா, தொடர்ந்து தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரை பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலும் மிகையாகாது. 

ffDSF

உடல் எடை அதிகரித்ததற்கு விமர்சிக்கப்பட்ட வித்யா பாலன், அதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், என் உடலை நானே வெறுக்கும் சூழ்நிலையில் இருந்தேன். யோகா, உடற்பயிற்சி செய்தாவது உடல் எடையை குறைத்துவிட எண்ணினேன். அப்போவதாவது நம்மை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி எடையை குறைத்தேன், அப்போதும் என்னை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள தேவையில்லை என்பது அப்போதுதான் புரிந்தது.

ddvvv

அதன்பிறகு என் உடலை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன், என் உடலுக்கு நான் மரியாதை அளித்தேன். அதனால் எனக்கு நானே அழகாய் தெரிய துவங்கினேன், மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது.

zddvzxvxv

மக்கள் எப்போதும் மற்றவர்கள் உடல் குறித்து பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். உன் எடை அதிகமா இருக்கு, என்ன டயட் எடுக்குற, என்ன சாப்பாடு சாப்பிடுற, இதுபோன்ற பேச்சுகளில் நான் நாட்டம் செலுத்துவதில்லை. மற்றவர்கள் உடலை பற்றி மிக எளிதாக விமர்சிக்கிறார்கள், அவர்களின் மனம் சிறிதாக இருக்கிறது, வெட்கப்பட வேண்டியது அவர்கள்தான் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்து; புனரமைப்புக்கு ரூ.1975 கோடி தரும் பிரபல நடிகையின் கோடீஸ்வர கணவர்!