“என் இல்லத்தரசியுடன்” ஈரோடு மகேஷ் மனைவியுடன் எடுத்த செல்பி..இணையத்தில் வைரல்!

 

“என் இல்லத்தரசியுடன்” ஈரோடு மகேஷ் மனைவியுடன் எடுத்த செல்பி..இணையத்தில் வைரல்!

தமிழ் ஆசிரியரான இவர் மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என படுபிஸியாக  இருக்கிறார்.

தொகுப்பாளர், பேச்சாளர் என மக்கள் மத்தியில் பிரபலமான  ஒருவராக வலம் வருபவர் ஈரோடு மகேஷ். தமிழ் ஆசிரியரான இவர் மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என படுபிஸியாக  இருக்கிறார்.

 

ஈரோடு மகேஷை தெரியும் அவர் குடும்பத்தை கண்ணுல காட்டவே மாட்டுறீங்களேப்பா என்று நினைத்தவர்களுக்குச் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி.

 

டிவி தொகுப்பாளினியாக இருந்தவர்.  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு  அமிழ்தா என்ற மகளும் உள்ளார். 

ttn

இந்நிலையில் ஈரோடு மகேஷ் தனது மனைவியுடன் விஜய் டிவி செட்டுக்கு வந்துள்ளார். அப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பாக்கியலட்சுமி என்ற சீரியல் புரொமோஷனுக்காக புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதை மகளிர்  தினத்தை முன்னிட்டு #என் இல்லத்தரசியுடன் ஹேஷ்டாக்குடன் விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.