என்.ஆர்.சி – பிஜேபியின் லட்சியத் திட்டத்தில் ஊழல்!.

என்.ஆர்.சி  – பிஜேபியின் லட்சியத் திட்டத்தில் ஊழல்!.

அஸ்ஸாம் மாநிலத்தில் 2015 முதல் 2019 வரை என்.ஆர்.சி க்காக செய்யப்பட்ட வேலைகளிலும் ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் நடந்திருப்பதாக அந்த மாநில நிதி அமைச்சரே அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் 2015 முதல் 2019 வரை என்.ஆர்.சி க்காக செய்யப்பட்ட வேலைகளிலும் ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் நடந்திருப்பதாக அந்த மாநில நிதி அமைச்சரே அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் ஹிமந்த் பிஷ்வா சர்மா. 2015-வரை காங்கிரசில் இருந்தவர். 2016-ல் பிஜேபியில் இணைந்தவர். கடந்த வாரம் என்.ஆர்.சிக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களின் தலைக்கு மேல் ஹெலிக்காப்டரில் பறந்து சென்று செய்திகளில் இடம் பிடித்தவர் இந்த ஹிமந்த் பிஷ்வா சர்மா!

hemantha-biswa

இவர், அஸ்ஸாம் மாநில சி.ஏ.ஜி அறிக்கையில் பதினாறு விதமான முறைகேடுகளை கண்டுபிடித்து இருக்கிறது. இதன் பணமதிப்பு 1600 கோடியைத் தாண்டும் என்று சொல்லி இருக்கிறார்.என்.ஆர்.சி குறித்த அறிக்கை அடுத்த வாரம் அஸ்ஸாம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மாநிலத்தின் நிதி அமைச்சரே முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி இருப்பது அரசு தரப்பில் அதிர்ச்சியையும், எதிர்கட்சிகள் தரப்பில் உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

சின்னஞ்சிறு மாநிலமான அஸ்ஸாமிலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்றால், இந்தியா முழுமையும் இந்தக் கணக்கெடுப்புக்கு 4.5 லட்சம் கோடி தேவை என கணக்கிடப்பட்டு இருப்பதால், இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பப் போகின்றனவோ என்கிற எதிர்பார்ப்புதான் இரண்டுக்குமே காரணம்.