என்.ஆர்.சிக்கு போட்டியாக என்.ஆர்.யூ! மோடியைக் கலாய்க்கும் இளைஞர் காங்கிரஸ்

என்.ஆர்.சிக்கு போட்டியாக என்.ஆர்.யூ! மோடியைக் கலாய்க்கும் இளைஞர் காங்கிரஸ்

தேசிய குடிமக்களை கணக்கெடுக்கும் என்.ஆர்.சி என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மொத்த  இந்தியாவையும் பதட்டமாக்கி இருக்கிறது பிஜேபி. என்ன போராட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள். நாங்கள் சட்டத்தை அமல் படுத்தியே தீருவோம்,என்று அறிவித்து இருக்கிறார் அமித் ஷா.

CONGRESS

இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த  பி.வி ஸ்ரீநிவாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். என்.ஆர்.சி.போலவே இளைஞர் காங்கிரசும் ஒரு கணக்கெடுப்பை நடத்தப் போகிறது.அது நேஷனல் ரிஜிஸ்ட்டரி ஆஃப் அன் எம்ப்ளாய்மெண்ட்!. அதாவது தேசிய வேலை இல்லாதோர் பதிவேடு!.இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லோதோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.

congress

நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்கின்றன.சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.என காரணங்களைச் சுட்டிக்காட்டி இருக்கும் இளைஞர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமித் ரஞ்சன் பாண்டே, அதற்காகவே தாங்கள் அறிவிக்க இருக்கும் தொலைபேசி எண்ணுக்கு வேலையில்லாத இளைஞர்கள் மிஸ்டுகால் கொடுத்து தங்களை என்.ஆர்.யூவில் இணைத்துக்கொள்ள அளைத்திருக்கிறார். 

அதோடு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரான கிருஷ்ணா அரவாலு வரும் 28-ம் தேதி ராகுல் காந்தி இந்த என்.ஆர்.யூ கணகெடுப்பில் பங்கேற்பார் என்று அறிவித்து இருக்கிறார்.