என் அம்மா போன்றவர், ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை தருகிறார் : என்.டி. ராமராவின் மனைவி மீது நடிகர் பரபரப்பு புகார்!

 

என் அம்மா போன்றவர், ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை தருகிறார் : என்.டி. ராமராவின் மனைவி மீது நடிகர் பரபரப்பு புகார்!

என்.டி. ராமராவ் மனைவி பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகர் ஒருவர் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா: என்.டி. ராமராவ் மனைவி பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடிகர் ஒருவர் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

என்.டி. ராமராவின் மனைவியின் அரசியல் 

ntr

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி.  என்.டி. ராமராவின் மறைவுக்கு பிறகு தெலுங்குதேசம் கட்சியை அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துச் செல்ல, லட்சுமியோ என்.டி.ஆர். தெலுங்குதேசம் என்ற புதிய கட்சியை நடத்தினார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 

பாலியல் புகார் 

koti

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லட்சுமி பார்வதி மீது நடிகர் ஆனந்த் பால் என்பவர், பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘லட்சுமி பார்வதியின் குடும்பத்தினருடன் கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு நல்ல பழக்கம் உள்ளது. நான் அவரை என் அம்மாவாக நினைக்கிறேன் . ஆனால்  லட்சுமி பார்வதியோ என்னுடன் தவறான நோக்கத்தில் பழகிவருகிறார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, என்னை காதலிப்பதாகக் கூறி வருவதோடு, வாட்ஸ் ஆப்பில் ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுக்கிறார். நான் அவர் பேச்சை கேட்கும் பட்சத்தில், எனக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் பெரிய பதவி வாங்கி தருவதாகவும், அப்படி அவரது ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்றும் மிரட்டி வருகிறார். அதனால் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவில் பரபரப்பு 

ntr wife

நடிகர் ஆனந்த் பால் புகாரைப் பெற்றுக் கொண்ட வினுகொண்டா போலீசார் இப்புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். பரபரப்பான அரசியல் களத்தில் என்.டி. ராமராவின் மனைவி மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது ஆந்திர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சுமி என்.டி.ஆருக்கு தடை 

ntr

முன்னதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான  லட்சுமி என்.டி.ஆர்  படத்தை தெலுங்கு தேசம் கட்சி,  தேர்தலுக்கு முன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி இடைக்காலத் தடை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ஹீரோயினாக நடிக்க ஒரு நாள் இரவு அவருடன் படுக்கையை பகிர வேண்டும் எனக்கேட்டார்! பிரபல நடிகை புகார்!?