‘என் ஃபோன்ல இருக்க ஒரே கேண்ட்டிட் புகைப்படம் இது தான்’: வைரலாகும் சூப்பர் ஸ்டார் லேட்டஸ்ட் புகைப்படம்!

 

‘என் ஃபோன்ல இருக்க ஒரே கேண்ட்டிட் புகைப்படம் இது தான்’: வைரலாகும் சூப்பர் ஸ்டார் லேட்டஸ்ட் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

1992ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் திரைப்படம் தர்பார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். 

கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கிய முதற் கட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ரஜினியின் கேண்டிட் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘பேரக்குழந்தையுடன் ரஜினி சார். என் ஐ போனில் இருக்க ஒரே கேண்டிட் பிக் இது மட்டும் தான். இருவரும் மானிட்டரை பார்த்து ரசித்து கொண்டுருக்கிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.