என்று தணியும் இந்த என்கவுண்ட்டர் சோகம்?

 

என்று தணியும் இந்த என்கவுண்ட்டர் சோகம்?

லிங்கண்ணாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது உடல் முழுவதும் காயங்களும் கைகள் கட்டிப்போடப்பட்டு இருந்ததற்கான தடயங்களும் இருந்ததைக் கண்ட உறவினர்கள் 200 பேர் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட ஆரம்பித்தனர்.

மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவர் என்று கூறி கடந்த மாதம் தெலுங்கானா ராலகட்டா வனப்பகுதியில் லிங்கண்ணா என்பவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். லிங்கண்ணாவின் உறவினர்களுக்குகூட தெரிவிக்காமல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட அவரது உடலை, ஒரு நீண்ட கம்பில் கட்டி, லிங்கண்ணாவின் உறவினர்கள் இருவரை வைத்து உடலை சுமந்து வரச் செய்திருக்கின்றனர். லிங்கண்ணாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது உடல் முழுவதும் காயங்களும் கைகள் கட்டிப்போடப்பட்டு இருந்ததற்கான தடயங்களும் இருந்ததைக் கண்ட உறவினர்கள் 200 பேர் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட ஆரம்பித்தனர்.
 

Tribes protest against fake encounter

லிங்கண்ணாவின் உடலை சுமந்துவந்த இருவரையும் விடுதலை செய்யச் சொல்லி குழுமியிருந்த 200 பேரும் கோஷம் எழுப்பவே, உஷாரடைந்த போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட ஆரம்பித்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கிராமத்தினர் கற்களைவீசி காவல்துறையினரை விரட்டியடித்தனர். இந்த களேபரத்துக்கு இடையில் கிராமத்தினரிடம் ஒரு காவலர் சிக்கிக்கொள்ளவே, அவரை நையப்புடைத்தனர். அவரை கிராமத்தினரிடமிருந்து மீட்டு காவல்துறை அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். லிங்கண்ணாவை காவல்துறை போலி என்கவுண்ட்டரில் சுட்டுகொன்றுவிட்டதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை காலம்தான் இந்த வனவாழ் மக்கள் மாவோயிஸ்ட்களிடமும் காவல்துறையினரிடமும் சிக்கி போராட்டகளத்திலேயே உழல வேண்டுமோ?