என்மீது அன்புள்ளம் கொண்டவர்கள் யாரேனும் செய்திருக்கலாம்! ஓ.பி.எஸ்ஸின் அடுத்த போஸ்டர் அஸ்திரம்

 

என்மீது அன்புள்ளம் கொண்டவர்கள் யாரேனும் செய்திருக்கலாம்! ஓ.பி.எஸ்ஸின் அடுத்த போஸ்டர் அஸ்திரம்

என்னதான் அதிமுகவோட கூட்டணியில் இருந்தாலும், எடப்பாடி உள்ளிட்ட மத்த அதிமுககாரங்களைவிட, ஓ.பி.எஸ்னா பாஜகவுக்கு தனிச்செல்லம். அதனால், அவர் பையனுக்கு மந்திரிபதவி குடுத்தாங்களா? இல்லேன்னா இந்த மாதிரி போஸ்டர் எல்லாம் அடிச்சு ஓ.பி.எஸ்ஸே மறைமுகமா டிமாண்ட் பண்றாரான்னு இன்னும் 24 மணி நேரத்துல தெரியவரும்.

எந்த இட‌த்துல எது நடந்தாலும் இருந்த இடத்திலிருந்தே கன்னித்தீவு மூசாவின் மாயக்கண்ணாடியில் தெரியிற மாதிரி, ஓ.பி.எஸ். குடும்பம் மட்டும் அரசியலில் ஒருவாரத்திற்கு அட்வான்ஸ்டாக இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, ‘தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத் அவர்களே’ன்னு போர்ட் வச்சாங்க.

Kuchanur

தாய்க்கழகமான பாஜகவோடு தேர்தல் கமிஷன் இணைஞ்சுட்டதால, கூட்டணி தர்மத்துக்காக ஜெயிக்க வச்சுருப்பாங்கன்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு.

OP Ravindranath

ஆனா, இப்ப நடந்திருக்கிறதைப் பார்த்தீங்கனா, ஆச்சர்யத்தில் மூழ்கிப்போய்டுவீங்க. போடோவை பாருங்க. ரவீந்திரநாத் பேருக்கு பின்னாடி, மத்திய அமைச்சர்னு போட்ருக்கு. மே 30ஆம் தேதி மாலைதான் மோடி இரண்டாவது முறையா பதவி ஏத்துக்கப்போறார்.

Poster

அப்டீன்னா, அன்னைக்கி மதியமோ இல்லை காலை நேரத்துலதான் மந்திரிசபை பத்தின அறிவிப்பும் வரும். கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி இருக்குதுன்னா, விஷயத்தை அந்த கட்சிகிட்ட சொல்லிட்டு, முறையா அறிவிப்பு வர்ற வரைக்கும் பேசாம முறைவாசல் பண்ணிகிட்டு இருக்கணும்கிற எச்சரிக்கையும் வரும். இங்க அப்புடியா?

என்னதான் அதிமுகவோட கூட்டணியில் இருந்தாலும், எடப்பாடி உள்ளிட்ட மத்த அதிமுககாரங்களைவிட, ஓ.பி.எஸ்னா பாஜகவுக்கு தனிச்செல்லம். அதனால், அவர் பையனுக்கு மந்திரிபதவி குடுத்தாங்களா? இல்லேன்னா இந்த மாதிரி போஸ்டர் எல்லாம் அடிச்சு ஓ.பி.எஸ்ஸே மறைமுகமா டிமாண்ட் பண்றாரான்னு இன்னும் 24 மணி நேரத்துல தெரியவரும். அதுக்குள்ள, இந்த போஸ்டருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, எங்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்கள் யாராவது செய்திருக்கலாம்னு ஓ.பி.எஸ். அப்பாவியா ஒரு அறிக்கை விடுவாரு பாருங்க.

ஆனா ஒண்ணு. ஓ.பன்னீர்செல்வம் எந்த ஊரு ஜோசியக்காரனை பாக்குறாருன்னு தெரியலை! அவ்ளோ துல்லியமா நடக்குது! எனக்கென்னவோ சீக்கிரமே, ‘இந்தியாவின் ஜனாதிபதி ஓ.பன்னீர்செல்வம் அவர்களே’ன்னு போஸ்டர் அடிக்கப்போறானுங்க. அதுவும் நடக்கத்தான் போவுது, பாக்கத்தான் போறோம்.