“என்பிஆர் அவசியம்; CAA, NRC விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது” நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

 

“என்பிஆர் அவசியம்; CAA, NRC விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது” நடிகர் ரஜினிகாந்த்  பரபரப்பு பேட்டி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் பல்வேறு  வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் என   பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் பல்வேறு  வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.

ttn

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “என்பிஆர் அவசியம், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் நான் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டி விடுகிறார்கள்’ என்றார்.  ரஜினியின் இந்த பதிலானது வழக்கம் போல சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.