என்ன விட்டுட்டு போய்ட்டாங்க: வேர்ல்டு கப் டீமை திட்டிய பிரபலம்

 

என்ன விட்டுட்டு போய்ட்டாங்க: வேர்ல்டு கப் டீமை திட்டிய பிரபலம்

கடந்த 1983 ஆம் ஆண்டு வேர்ல்டு கப் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது.

கடந்த 1983 ஆம் ஆண்டு வேர்ல்டு கப் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு 83 என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகிறது. இதை பிரபல பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்க, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

jeeva

இதில் அப்போதைய கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர்சிங் நடிக்க, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். அதையொட்டி படத்தின் படப்பிடிப்பு இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவிருக்கிறது. 

jeeva

அதற்காக படக்குழுவினர் லண்டன் கிளம்பியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட ஜீவா ஏன் இல்லை என்று ஒரு ரசிகர் கேள்விகேட்க, அதற்கு பதிலளித்த ஜீவா, ‘விட்டுட்டு போயிட்டாங்கப்பா’ என்று நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.