என்ன நினைக்கிறார் எடப்பாடி… மறைமுகத் தேர்தலால் யாருக்கு லாபம்?..அடிச்சு தூங்கப்போகும் கவுன்சிலர்கள்..!

 

என்ன நினைக்கிறார் எடப்பாடி… மறைமுகத் தேர்தலால் யாருக்கு லாபம்?..அடிச்சு தூங்கப்போகும் கவுன்சிலர்கள்..!

ஊராட்சித் தலைவர் முதல் மேயர் வரையிலான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் திட்டம் எடப்பாடியார் எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பது தெரியாது! இதனால் பயனடையப்போவது,தேமுதிக மற்றும் பிஜேபிதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒன்றியங்கள் இருக்கட்டும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே பிஜேபி நான்கு,பாமக மூன்று,தேமுதிக மூன்று மாநகராட்சிகளைக் கேட்பதாகப் பேசப்பட்டது.அத்தனை தரமாட்டார்கள் என்று அவர்களுக்குகே தெரியும்!
தமிழகத்தில் அதிக மாநகராட்சிகள் இருப்பது கொங்குப் பகுதியல்தான். சேலம்,கோவை,ஈரோடு,திருப்பூர்,ஒசூர் இவை அனைத்திலுமே தாங்கள் ஸ்ட்ராங்காக.இருப்பதாக அதிமுக நம்புகிறது.

இதில் கோவையையும்,திருபூரையும் கேட்பதுடன்,புத்தம் புது நாகர்கோவில் மாநகராட்சியையும் கேட்டது பிஜேபி.பாமக ஒசூரையும் சேலத்தையும் கேட்டது.தேமுதிக இன்னும் ஒருபடி மேலே போய் சென்னை மற்றும் சேலத்தைக் கேட்டது.சேலத்துக்கும் சென்னைக்கும் எடப்பாடியார் வேட்பாளரை முடிவு  செய்துவிட்டார் என்றும்,மதுரை, ராஜன் செல்லப்பாவுக்குத்தான் என்றும் பேச்சுக்கள் அப்போதே கிளம்பின.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 150 நகராட்சிகள் இருக்கின்றன, இவற்றில் கிருஷ்ணகிரி, விழுப்புரம்,திருவள்ளூர்,கரூர் போன்றவை மாநகராட்சிக்கு இணையான வருமானம் உள்ளவை.

money

இப்போது எடப்பாடியார் மறைமுகத் தேர்தல் நடத்தினாலும் இந்தக் கோரிக்கைகள் அப்படியேதானே இருக்கும்.நாகர் கோவிலில்.ஒரு பிஜேபிகாரர் நின்று தோற்றுப்போனாலாவது திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருக்கும்.இப்போது அங்கே.அதிமுகவே மெஜாரிட்டி வார்டுகளை வென்றாலும் அந்த மாநகராட்சியையோ,கோவையையோ கேட்டால் எடப்பாடி மறுத்து விடுவாரா? மறுபடி தலைமைச்.செயலகத்தில் ரைடு.வந்தால் தடுத்து விடுவாரா?!

eps

150 மாநகராட்சிகளில் அதிமுக 75 இடங்களைப் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம்,அதில் பிஜேபி,பாமக,தேமுதிக தலா பத்து நகராட்சிகளை கேட்கமாடன.என்பதற்கு என்ன உத்தரவாதம்.
அதனால்,இந்த மறைமுக தேர்தலின் பின்னணியில் ஒரே திட்டம்தான் இருக்க முடியும்.இந்த நூற்று அறுபத்தைந்து பதவிகளும் தேர்தல் முடிந்த பிறகு ஏலத்துக்கு வரப்போகின்றன! மெஜாரிட்டியாக வென்ற கட்சி அதன் கவுன்சிலர்களைக்  கூட்டி ஏலம் விடப்போகின்றன.அடுத்த சட்டசபைத் தேர்தல் முடிவு எப்படி ஆனாலும்,இந்தப் பதவிகளுக்கு.ஐந்தாண்டு ஆயுள் இருப்பதால் கவுன்சிலர்களும் போட்டி போட்டு ஏலம்.கேட்கக்கூடும்.நகராட்சிக்கு சொந்தமான,பார்க்கிங்,மார்கெட்,பொதுக்கழிப்பிடம் போல இந்தப் பதவிகளும் நல்ல தொகைக்கு ஏலம் போகும்..!