என்ன தேவதாசி ஆகுன்னு சொல்றது எந்த நியாயமும் இல்லை – அம்மாவுக்கு சின்மயி பதில்!

 

என்ன தேவதாசி ஆகுன்னு சொல்றது எந்த நியாயமும் இல்லை – அம்மாவுக்கு சின்மயி பதில்!

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து  தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன்   திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார்.இதை கண்டு ஆத்திரமடைந்த  சின்மயி, ‘ஒருவன் மீது பாலியல் புகார் விழுந்தால் அவனால் வெளியில் தலைகாட்ட முடியாது. யாரையும் எதிர்கொள்ள முடியாது. ஆனால்  வைரமுத்து இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஆனால்  பாதிப்புக்குள்ளான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் திரையுலகில் உள்ள பெரியவர்களாலஎனக்கு கொடுக்கப்பட்ட நீதி’ என்றும் சாடினார். 

Chinmayi

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாடகி சின்மயின் தாயார் பத்மஷ்னி, ”தேவதாசி முறை என்பது இந்திய தேசத்திற்கு சொந்தமான ஒன்று இதனை சிதைத்ததால் பெரியாரை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்” என்று தெரிவித்தார்.

 

 

இதுகுறித்து பின்னணி பாடகியும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேவதாசி முறையை நான் complete ஆ எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை.  அவ்ங்க actionsகு அவங்கதான் responsible. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன் for justifiably hurt sentiments” என பதிவிட்டுள்ளார்.