என்ன‌து ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு ஆடு மேய்க்கப் போறீங்களா?

என்ன‌து ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு ஆடு மேய்க்கப் போறீங்களா?

அண்ணாமலையின் அதிரடிக்கு மொத்த கர்நாடகமும் ரசிகர்கள். எந்தளவுக்கு என்றால், ‘கர்நாடக சிங்கம்’ என பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு. ஒன்பது ஆண்டுகள் மட்டுமே பணியில் இருந்தாலும், ஒட்டுமொத்த கர்நாடகவாசிகளின் அன்பை பெறும் அளவுக்கு நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் போன அண்ணாமலை, தன் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் ஒன்று, “என் ஊரில் என் வீட்டில் என் ஆடு இன்னமும் என் குரலை ஞாபகம் வைத்திருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு அலுவலகத்தில் பத்துபேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அதில் ஒருவன் அதிசிறந்த வேலைக்காரனாக இருப்பான், அவனே கோணங்கியாகவும் இருப்பான். அந்தமாதிரி திறமையான வேலைக்காரன் அண்ணாமலை. வெறும் அண்ணாமலை அல்ல, அண்ணாமலை ஐ.பி.எஸ். கரூர் மாவட்டதில் பிறந்து, கர்நாடாகவில் அதுவும் தலைநகரமாம் பெங்களூருவின் துணை ஆணையராக பணியாற்றிய அண்ணாமலை, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Annamalai IPS

அண்ணாமலையின் அதிரடிக்கு மொத்த கர்நாடகமும் ரசிகர்கள். எந்தளவுக்கு என்றால், ‘கர்நாடக சிங்கம்’ என பட்டப்பெயர் சூட்டும் அளவுக்கு. ஒன்பது ஆண்டுகள் மட்டுமே பணியில் இருந்தாலும், ஒட்டுமொத்த கர்நாடகவாசிகளின் அன்பை பெறும் அளவுக்கு நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் போன அண்ணாமலை, தன் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் ஒன்று, “என் ஊரில் என் வீட்டில் என் ஆடு இன்னமும் என் குரலை ஞாபகம் வைத்திருக்கிறதா என தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

Annamalai IPS

ரொமான்டிசைஸ் செய்து சற்றே மிகைப்படுத்தி எழுதியிருந்தாலும், இது அவருடைய கருத்தே. மனுசன் அந்தளவுக்கு இலகுவானவராக இருந்திருக்கிறார். காவலர் வேலையை தான் மிகவிரும்பி செய்ததாகவும், ஆனால் தனக்கு மிகப்பிடித்த அதிகாரியான மதுக்கார் ஷெட்டியின் மரணம் தன் சொந்த வாழ்க்கை பக்கம் கவனத்தை திருப்பியிருப்பதால், இந்த ராஜினாமா என்கிறார் அண்ணாமலை.

பணியில் இருந்து விலகியபின், அவர் சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்யவிருப்பதாகவும், இல்லையில்லை அவர் அரசியலில் சேரப்போகிறார் என்றும் இருவித ஊகங்கள் உலவுகின்றன. அண்ணாமலையே இதுகுறித்து நேரடியாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.