“என்னோட கல்யாணத்துக்கே நான் பாஸ் வாங்கிட்டு தான் வந்தேன்”..கதறும் புதுமாப்பிள்ளை!

 

“என்னோட கல்யாணத்துக்கே நான் பாஸ் வாங்கிட்டு தான் வந்தேன்”..கதறும் புதுமாப்பிள்ளை!

அதனால் நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வீடியோ காலில் நிச்சயதார்த்தம், வீடியோ காலில் ஆசீர்வாதம் என கொரோனா புது மணத்தம்பதிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, கூட்டம் கூட்டி திருமணம் நடத்தி சர்ச்சையில் சிக்கும் திருமணங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மற்ற சிலர், எளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர். 

ttn

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் சங்கர் – மாலினி, சரவணன் – அமுதா ஆகிய இரண்டு ஜோடிகளின் திருமணம் எளிமையான முறையில் மலைச்சியம்மன் – மலையன் சுவாமி கோவிலில் நடைபெற்றது. அதில் அவர்களது ஒரு சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்தவுடன் காரில் ஊர்வலம் செய்ய பிளான் போட்டிருந்த சங்கர் – மாலினி தம்பதி, ஊரடங்கு போடப்பட்டதால் பைக்கிலேயே வீட்டுக்கு சென்றனர். 

இது குறித்து பேசிய புதுமாப்பிள்ளை சங்கர், 4 மாததிற்கு முன்னரே மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்து விட்டது. அதனால் தான் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் பைக்கில் சென்றோம் என்று கூறினார். மேலும், ஊரடங்கு போடப்பட்ட போது தனது தங்கை வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும் தன்னுடைய திருமணத்துக்கே அழைப்பிதழ் காட்டி பாஸ் வாங்கிக் கொண்டு தான் வந்தேன் என்றும் கூறினார்.