என்னை விட நீ தான் நல்ல நடிச்சிருக்க நண்பா! ரசிகரின் நடிப்பை பாராட்டிய லாரன்ஸ்

 

என்னை விட நீ தான் நல்ல நடிச்சிருக்க நண்பா! ரசிகரின் நடிப்பை பாராட்டிய லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை tik tok செய்திருந்த ரசிகரின் வீடியோவை லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை: காஞ்சனா 3 படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை tik tok செய்திருந்த ரசிகரின் வீடியோவை லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடன இயக்குநர்,நடிகர்,இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அது ஒரு பக்கம் இருக்க சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காஞ்சனா படத்தின் 3ம் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கண் கலங்கி பேசும் ஒரு செண்டிமெண்டான காட்சியை ரசிகர் ஒருவர் லாரன்ஸ் போலவே மேக்கப் போட்டு பேசியிருந்தார். அந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம வந்தது.

இந்த நிலையில் அதை பார்த்த லாரன்ஸ் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘சகோதரா நீ என்னை விட நன்றாக நடித்துள்ளாய்.. வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.