என்னை விட்டா போதும்டா சாமி! எனக்கு தலைவர் பதவியே வேண்டாம்! மீண்டும் பெரிய கும்பிடு போட்ட ராகுல் காந்தி…

 

என்னை விட்டா போதும்டா சாமி! எனக்கு தலைவர் பதவியே வேண்டாம்! மீண்டும் பெரிய கும்பிடு போட்ட ராகுல் காந்தி…

ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகியது விலகிதான். மீண்டும் தலைவராக மாட்டேன். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் நான் தலையிட மாட்டேன் என காங்கிரசின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி உறுதிபட கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ. தனி பெருங்கட்சியாக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மத்தியில் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டது. ஆனால் இந்தியாவை வெகுநாட்களாக ஆண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட தக்க வைக்க முடியவில்லை. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை அந்த தேர்தல் முடிவுகள் நிர்ணயம் செய்யும் என்று பரவலாக பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடியாகவும், ராகுலுக்கு பெரிய ஏமாற்றமாகவும் அமைந்து விட்டது.

ஸ்மிரிதி இரானி

காங்கிரஸ் கட்சி அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆட்சியை பிடிக்கக்கூடிய அளவுக்கு இடங்களை கைப்பற்ற முடியவில்லை என்றாலும், ஓரளவு கணிசமான இடங்களையாவது கைப்பற்றி விடலாம் என்று நினைத்த ராகுலுக்கு தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி வந்தது. மேலும், உ.பி.யில் நேரு குடும்பத்தின் தொகுதியாக கருதப்படும் அமேதியில் பா.ஜ. வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம்  அவர் தோற்றதால் விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார். 

தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை அந்த கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என அவர்கள் அறிவித்தனர். ஆனால் ராகுல் காந்தியோ நான் ராஜினாமா செய்தது செய்ததுதான் உறுதியாக இருக்கிறார். 

ராகுல்

இந்த நிலையில் ராகுல் காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.  புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் நான் தலையிட மாட்டேன். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தால் அந்த விவகாரத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்று கூறினார்.