‘என்னை மன்னித்து விடுங்கள்; நான் தோல்வி அடைந்த தொழிலதிபர்’ ; எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் எழுதிய உருக்கமான கடிதம்!

 

‘என்னை மன்னித்து விடுங்கள்; நான் தோல்வி அடைந்த தொழிலதிபர்’ ; எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் எழுதிய உருக்கமான கடிதம்!

கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ள நிலையில் அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

‘என்னை மன்னித்து விடுங்கள்; நான் தோல்வி அடைந்த தொழிலதிபர்’ ; எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் எழுதிய உருக்கமான கடிதம்!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருகனும் கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ள நிலையில் அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் இந்தியா முழுவதும் கிளைகள் கொண்டுள்ள கஃபே காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார்.  வி.ஜி.சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி நேற்று இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து கூறும் அவரது கார் ஓட்டுநர், நேற்று இரவு நேத்ராவதி ஆற்றுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். நானும் அதன்படி சென்றேன். அப்போது காரை ஓரமாக நிறுத்து நான் வாக்கிங் சென்று விட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால்  அவர் திடீரென்று பாலத்திலிருந்து  ஆற்றில்  குதித்து விட்டார்’ என்று கூறியுள்ளார். இதனால் வி.ஜி.சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றில் இறங்கி தீவிர தேடுக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டிற்குச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் வி.ஜி.சித்தார்த்தா கஃபே காபி டே நிர்வாகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘என் 37 ஆண்டு கடின உழைப்புக்குப் பின்னால் எந்த லாபகரமான தொழில்முறையை கையாள முடியவில்லை. நான் இதுவரை 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினேன். ஆனாலும் லாபகரமான தொழிலை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்களைக் கைவிடுகிறேன்.பங்குகள் தொடர்பான விவகாரத்தால் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. இதனால் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தவறுகள் மற்றும் கடன்களுக்கு நான் மட்டுமே காரணம். இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது குடும்பத்திற்கும் இது தெரியாது. என் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுங்கள்.  மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர். என்னை புரிந்துகொண்டு வருங்காலத்தில் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். 

இதன் மூலம் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா  தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.