என்னை சந்திக்க துணிச்சல் இல்லை; எனது தாயை இழுக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி விளாசல்

 

என்னை சந்திக்க துணிச்சல் இல்லை; எனது தாயை இழுக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி விளாசல்

என்னை சந்திக்க துணிச்சல் இல்லாமல் எனது தாயை இழுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விளாசியுள்ளார்

போபால்: என்னை சந்திக்க துணிச்சல் இல்லாமல் எனது தாயை இழுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விளாசியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வருகிற 28-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக-வும், காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது. இரு கட்சிகளும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜ் பப்பர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரின் வயதுக்குச் சரியாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது. ஆனால், இப்போது பிரதமராக இருக்கும் மோடியின் தாயின் வயதுக்கு (97) ஏற்றார்போல் ரூபாயின் மதிப்பு சரிகிறது என்றார்.

இந்நிலையில்,  மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூரில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  என்னுடைய தாய்க்கு அரசியல்குறித்து எந்தவிதமான சின்ன விஷயமும் தெரியாது. எப்போதும் கடவுளை நினைத்துப் பூஜைசெய்து கொண்டு வீட்டில் இருப்பவரை காங்கிரஸ் கட்சி அரசியலுக்குள் இழுத்திருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நான் காங்கிரஸ்கட்சியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோற்கடித்து வருகிறேன். என்னை எதிர்க்க முடியாத காங்கிரஸ் கட்சி என் தாயை அரசியலுக்குள் இழுக்கிறது என்றார்.