என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு காரணம் இவர்கள் தான்: கராத்தே தியாகராஜன் சாடல்!

 

என்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு காரணம் இவர்கள் தான்: கராத்தே தியாகராஜன் சாடல்!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டார்

காங்கிரஸ் கட்சியிலிருந்து தன்னை இடைநீக்கம் செய்ததற்குக் காரணம் திமுகவின் நெருக்கடி தான் காரணம்  என்று  கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

stalin

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மக்களவைத் தேர்தலில்  தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் திமுகவிற்காக ஓட்டுப்போடவில்லை.  ராகுல் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர். சத்தியமூர்த்தி பவனில் நால்வர்  அமர்ந்துகொண்டு நடத்துவது கட்சியா? கே.எஸ்.அழகிரி இன்னும் சில நாட்களில் மாற்றப்படலாம். அடுத்த தலைவராகத் தான் கூட வரலாம்’ என்றார்.தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று நான்  கூறியது என் சொந்த கருத்து. அதற்காக திமுக காங்கிரஸுக்கு அளித்த நெருக்கடியின் காரணமாகத் தான் கட்சியிலிருந்து என்னை நீக்கினார்கள்’ என்றார். 

thiyagarajan

முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரிய நிலையில், நான் பேசியது என்னுடைய சொந்த கருத்து’ என்று ஜகா வாங்கினார்  கராத்தே தியாகராஜன். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை, கட்சியிலிருந்து  சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டது  குறிப்பிடத்தக்கது.