என்னை இறுக்க கட்டிப்பிடித்து காதுக்குள் முனுமுனுத்த நடிகர்: தனுஷ் பட நாயகி பகிரும் மீ டூ அனுபவம்!

 

என்னை இறுக்க கட்டிப்பிடித்து காதுக்குள் முனுமுனுத்த நடிகர்: தனுஷ் பட நாயகி பகிரும் மீ டூ அனுபவம்!

பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா தொடங்கி கோலிவுட்டில் சின்மயி வரை திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது.

மும்பை: பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா தொடங்கி கோலிவுட்டில் சின்மயி வரை திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது.

மீ டூ இயக்கத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் திரையுலகில் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னணி திரை பிரபலங்கள் குறித்து பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் தனக்கு நேர்ந்த கசப்பான பாலியல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள அமிரா, இரு திரையுலகிலும் தனக்கு பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்ததில்லை என்றும், ஆனால் கசப்பான பாலியல் சீண்டல்களை கடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

amyra

இது குறித்து பேசிய அமைரா, திரையுலகில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்களது பெயரை நான் கூற விரும்பவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அவர்களது பெயரை அம்பலமாக்குவேன் என்றார். மீ டூ அனுபவம் குறித்து பேசிய அமைரா, ‘ஷூட்டிங்கின் போது, நாயகன் ஒருவர் என்னை இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல கட்டி அணைத்து, காதுக்குள் வந்து என்னுடன் இந்த படத்தில் நடிப்பதில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்று கிசுகிசுத்தார்.

dhanush

மேலும், அந்த படம் ஷூட்டிங் முடியும் வரை அந்த நாயகனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டேன். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இதுமட்டுமல்லாமல், அந்த பட இயக்குநர், தன்னிடம் வந்து தான் இப்படி நடந்துக் கொண்டதற்கு அந்த நடிகரிடம் மன்னிப்புக் கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் அமைரா கூறியுள்ளார்.

amyra

இந்த மீ டூ இயக்கத்தின் மூலம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட பல முன்னணி பிரபலங்களின் பெயர் அம்பலமாகியிருப்பது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து மாஸ் ஹீரோக்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பது திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.