‘ என்னை ஆடு மேய்க்க விட்டுட்டாங்க, தயவு செஞ்சி காப்பாத்துங்க’: சவுதியில் கதறும் இளைஞர்; வைரல் வீடியோ!

 

‘ என்னை  ஆடு மேய்க்க விட்டுட்டாங்க, தயவு செஞ்சி  காப்பாத்துங்க’: சவுதியில் கதறும் இளைஞர்; வைரல் வீடியோ!

தன்னைக் காப்பாற்றும்படி சவுதி அரேபியாவிலிருந்து தெலங்கானா வாலிபர் கதறும் வீடியோ காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா: தன்னைக் காப்பாற்றும்படி சவுதி அரேபியாவிலிருந்து தெலங்கானா வாலிபர் கதறும் வீடியோ காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

saudi

தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏஜெண்ட் மூலம் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். முதலில் அவருக்கு அங்கு பண்ணை வீட்டில் வேலை என்று சொல்லப்பட்டது. ஆனால்  அதற்கு மாறாக பாலைவனத்தில் 300 செம்மறி  ஆடுகளை மேய்க்கும் பணி கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த  ஷமீர் நான் இந்த வேளைக்கு வரவில்லை என்று கூறி செய்யப் மறுத்துள்ளார்.ஆனால்   அவரின் உரிமையாளர்  அவரை தாக்கியதாகத் தெரிகிறது.

 

இதனால் ஓரிரு நாட்கள் இந்த பணியை செய்த ஹமீருக்கு  அதில் இருந்த கஷ்டம் தெரிந்தது. இதனால் 
தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார் ஷமீர். அதில், ஏஜெண்ட் என்னை ஏமாற்றிவிட்டார். சொன்ன வேலை ஒன்று, கொடுத்த வேலை ஒன்று. என்னை இங்கு அடித்து துன்புறுத்துகிறார்கள். நான் கடந்த 20 நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். என்னை மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். என்னை காப்பற்றுங்கள்’ என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள சிர்சிலா எம்.எல்.ஏ கே.டி.ராமாராவ்,  அங்குள்ள  இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளோம்.  அவர் விரைவில் தாயகம் அழைத்து வரப்படுவார். இது போன்ற விவகாரம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. முதலில் தெலங்கானா மாநிலம் கரீம்நகரை சேர்ந்த வீரய்யா தான் மேய்க்கும் ஒட்டகங்களில் ஒன்று  இறந்து விட்டதால் தான் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறியிருந்தார். அவரை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.  

saudi

வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு  வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் பலர் இப்படி  ஏமாற்றப்படும் சூழல் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே போகிறது.  அதனால் பாதிக்கப்படுவோரை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்குள்ள மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.