‘என்னை அவ ஏமாத்துறா; அவளோட பக்கமே இனிமே போகமாட்டேன்’ : முடிவுக்கு வந்த சாக்ஷி – கவின் காதல்!

 

‘என்னை அவ ஏமாத்துறா; அவளோட பக்கமே இனிமே போகமாட்டேன்’ : முடிவுக்கு வந்த சாக்ஷி – கவின் காதல்!

பிக் பாஸ் சீசன் 3-யின்  இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

‘என்னை அவ ஏமாத்துறா; அவளோட பக்கமே இனிமே போகமாட்டேன்’ : முடிவுக்கு வந்த சாக்ஷி – கவின் காதல்!

பிக் பாஸ் சீசன் 3-யின்  இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு மாத காலத்தைத் தாண்டியுள்ளது. சர்ச்சைகளுக்குப் பெயர் போன வனிதா, மீரா மிதுன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது கவின் – சாக்ஷி காதல் போர் வீட்டின் அமைதியைக் குலைத்துள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மொட்டை கடுதாசி டாஸ்கில், சாக்ஷி – கவின் இருவரின் தற்போது உறவுநிலை என்ன கேள்விக்கு பதிலளித்த கவின் , சாக்ஷிக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் இப்போதைக்கு இல்லை, வெறும் நட்பு மட்டுமே என்றார். இதனால் மனமுடைந்த சாக்ஷி கதறி அழுதார். குறிப்பாகக் கவின் குறித்தும் பேசும் போது, நான் பார்க்கும் போது, கவின் வேறொரு பொண்ணு கையை பிடிச்சிகிட்டு ஜாலியாக சுற்றுகிறார்  என்று லாஸ்லியாவை  குறிவைத்தார். இதற்கு பதிலளித்த  லாஸ்லியா எங்களுக்குள் இருப்பது நட்பு  என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வெளியாகியுள்ளது. அதில், கவின் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில், சாக்ஷி வேற மாதிரி ஆகிட்டா, என்னை காலிபண்ணணும்ணு நினைக்குறா. இனிமே நான் அந்த சைடு போகமாட்டேன்.என்னை அவ ஏமாத்துறாங்க.நான் அந்த சைடே போக விரும்பலங்க என்று கூற ஒருபக்கம் சாக்ஷி அழுகிறார். அதற்கு மதுமிதா நீங்க மூணுபேரும் பேசி முடிவெடுத்து இந்த விஷயத்தை முடிங்க என்று அட்வைஸ் பண்ண அங்கு என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா, சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்குப் பொறுப்பு நான், தயவுசெய்து இனிமே யாரும் என்கிட்ட வந்து கதைக்காதீங்க’ என்று கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்லும்படியாக அந்த புரொமோ முடிகிறது. 

இதன்மூலம் கவின் – சாக்ஷி காதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த வாரம்  ஒருவேளை இருவரில் யார் வெளியேற்றப்பட்டாலும் பிக் பாஸ் வீட்டில் காதல் கதைக்கு எண்டு கார்ட் போடப்படும் என்பது மட்டும் உறுதி.