‘என்னையும் கொன்றுவிடுங்கள்’ ; செருப்பால் அடித்துகொண்டு மயங்கி விழுந்த நிர்பயா குற்றவாளியின் மனைவி!

 

‘என்னையும்  கொன்றுவிடுங்கள்’ ; செருப்பால் அடித்துகொண்டு மயங்கி விழுந்த  நிர்பயா குற்றவாளியின் மனைவி!

நடந்த விசாரணைக்குப்பின் டெல்லி கீழமை நீதிமன்றம் 2013 செப்டம்பரில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பை வழங்கியது.  

மருத்துவ மாணவி ஒருவர்  2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தைரியமான பெண் என பொருள்படும் வகையில் நிர்பயா என்றழைக்கப்பட்ட அவருக்கு நேர்ந்த துயரம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணைக்குப்பின் டெல்லி கீழமை நீதிமன்றம் 2013 செப்டம்பரில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பை வழங்கியது.  

 

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, சீராய்வு மனு, குடியரசு தலைவரிடம் கருணை மனு என உயிர்வாழ பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த குற்றவாளிகளின் ஒட்டுமொத்த கதவுகளும் அடைக்கப்பட, நேற்று, குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்‌ஷய் குமார் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் இறுதியில் இன்று அதிகாலை  டெல்லி திகார் சிறையில்  நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். 

tt

இந்நிலையில் அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி மற்றும் 6 வயது மகன் நேற்று பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே காத்திருந்தனர். அப்போது உச்ச நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்தது அறிந்த அவரது மனைவி புனிதா தேவி, என்னையும் கொன்று விடுங்கள், என் கணவர் சாக போகிறார்.

ttn

நான் ஏன்  வாழ வேண்டும். ஒரு விதவையின் வேதனை என்ன என்பது அரசுக்கு தெரியாதா என்று கூறிக்கொண்டே தனது செருப்பைக்கொண்டு தன்னைத்தானே முடித்துக்கொண்டார். பின்பு அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.  பின்னர் அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அக்‌ஷய் குமார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதை அவரது குடும்பத்தினர் ஏற்கமறுத்தது குறிப்பிடத்தக்கது.