என்னையா செஞ்சுட்டான் என் கட்ட்சிக்காரன்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொங்கல்!

என்னையா செஞ்சுட்டான் என் கட்ட்சிக்காரன்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொங்கல்!

இரண்டு நாட்கள் முன்பு சின்னம்மா சசிகலா சிறை இருப்பதைப் பற்றி கண்கலங்க வருத்தம் தெரிவித்து செய்திகளில் இடம் பிடித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.ஆகா,இவர் அமமுக தினகரனின் ஸிலீப்பர் செல்லோ என்று அதிமுகவின் இரட்டை விவிஐபிக்கள் பதறிய நிலையில் அவர் இன்று ஒரு புது ஸ்டேட்மெண்ட் விட்டு இருக்கிறார்.

opr

துணை முதல்வர் ஒபிஎஸின் மகனும்,அதிமுகவின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினருமான ஒபிஎஸ் ரவீந்திரகுமாருக்கு இரண்டு நாட்கள் முன்னாள் ஒரு அவமானம் நேர்ந்தது.டெல்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டி ஊருக்கு வந்த ஒபிஎஸ் மகனுக்கு தேனி மக்களவைத் தொகுதி இஸ்லாமியர்கள் இரண்டு தினங்கள் முன்பு கருப்புக்கொடி காட்டினார்கள். அதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கு இடையில் குட்டி ஓபிஎஸ்ஸின் கார் கண்ணாடி உடைபட்டது.அது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

rajendra

அரசு கொண்டுவரும் ஒரு சட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்குத் தானே போக வேண்டும்.தொகுதி எம்பியை வழிமறித்து தாக்கலாமா.எங்கள் எம்.பி நினைத்தால் காரில் இருந்து இறங்கி உங்களைத் அடித்து விரட்டி இருக்க முடியாதா?.அதிமுககாரர்கள் சிங்கங்கள். நம்மால் மதக்கலவரம் வரக்கூடாது என்பதால்தான் அவர் பேசாமல் இருந்து விட்டார்.அதிமுககாரன் யாருக்கும் அஞ்சாதவன்,இந்தத் தாக்குதலுக்கு ஒருநாள் நாங்கள் பதிலடி தருவோம் என்று பேசி இருக்கிறார். இது தேனித் தொகுதி வாக்காளர்களுக்கு மட்டுமல்லாமல்,அதிமுகவின் இரண்டு விவிஐபிகளுக்கே அதிர்ச்சி அளித்திருக்கிறது.