என்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா? முதல்வர் காட்டம்

 

என்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா? முதல்வர் காட்டம்

மீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழுந்தவுடன், தனது செயலாளரை கூப்பிட்டு, இன்னைக்கும் நான்தானே முதல்வர் என செக் செய்துவிட்டுத்தான் பல் விளக்கவே போவார் போலிருக்கிறது

மீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழுந்தவுடன், தனது செயலாளரை கூப்பிட்டு, இன்னைக்கும் நான்தானே முதல்வர் என செக் செய்துவிட்டுத்தான் பல் விளக்கவே போவார் போலிருக்கிறது. தொடர்ச்சியாக இதனை கிண்டல் செய்துவந்த ஊடகங்கள், நேற்று வெளியான கருத்துகணிப்புகளுக்குப் பிறகு, ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டன.

kumaraswamy

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என ஊடகங்கள் திரி கொளுத்திப்போட, கடுப்பாகிவிட்டார் குமாரசாமி. நேற்று மைசூருவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட குமாரசாமி, ஊடகங்களைப் பார்த்து சாமியாடிவிட்டார். “எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல  தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? எங்களை சிறுமைப்படுத்த நீங்கள் யார்?” என்று கடிந்துகொண்ட்வர் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்டெ.

“உங்களைப் பற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையுமில்லை. சில சேனல்கள் மற்றும் இணையதளங்கள் அரசியல்வாதிகளை நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன, எனவே மீடியாவை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாக” ஒரே போடு போட்டார் பாருங்கள். பாவம், கொஞ்சம் கேப் விட்டு அடிங்க பங்காளிகளா!