‘என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்’: தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவும் கடிதமும்!

 

‘என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்’: தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவும் கடிதமும்!

சொந்தமாக 16 தறிகள்  வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதையடுத்து தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு மாணிக்கம் பாளையம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் கனகராஜ் -வனிதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.சொந்தமாக 16 தறிகள்  வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதையடுத்து தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் மொக்கயைம்பாளையம் சென்ற கனகராஜ்  அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதை  தொடர்ந்து அப்பகுதி மக்கள்,  வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர்  தகவல் கொடுக்க, கனகராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.பின்னர் அவரது  உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ttn

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளித் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்’ என்று எழுதப்பட்டிருந்தது. 

ttn

தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் முடியாமல்  கனகராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.