என்னுடைய சிகரெட் ஸ்டைல் எப்படி வந்தது தெரியுமா? மனம் திறந்த ரஜினி

 

என்னுடைய சிகரெட் ஸ்டைல் எப்படி வந்தது தெரியுமா? மனம் திறந்த ரஜினி

தனக்கு காமெடி படங்களில் நடிப்பது பிடிக்கும், ஏனென்றால் ஒருவரைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: தனக்கு காமெடி படங்களில் நடிப்பது பிடிக்கும், ஏனென்றால் ஒருவரைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே போல் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில்  நடிகர் ரஜினிகாந்த், இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட பல்வேறு சுவாரஸ்யமான சினிமா தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.அதில், ‘தனக்கு காமெடி படங்களில் நடிப்பது பிடிக்கும் என்றும் நான் செட்டிற்கு செல்லும் போது காமெடி காட்சிகள் படமாக்கப்படுவதாகக் கூறினால் குஷியாகிவிடுவேன்.ஒருவரைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய சிகரெட் ஸ்டைல் குறித்த கேள்விக்கு, ‘இந்தி படத்தில் அதை முதலில் செய்தவர் சத்ருகன் சின்ஹா. அவரிடம் இருந்து அதை எடுத்துக்கொண்டு என்னுடைய ஸ்டைலில் செய்தேன். அதை சரியாக செய்ய 1000 முறை பயிற்சி எடுத்தேன். இது ஒரு திறமை, ஆனால் அதற்கும் மேலாக நேரம் முக்கியமானது என்றும் என்னுடைய நடை ஸ்டைலாக  இருப்பதாக பலர் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு அது இயல்பானது’ என்று பதிலளித்துள்ளார்.