என்னுடைய உண்மையான அம்மா பின்னணி பாடகி அனுராதாதான்! – கேரளாவில் வித்தியாச வழக்கு

 

என்னுடைய உண்மையான அம்மா பின்னணி பாடகி அனுராதாதான்! – கேரளாவில் வித்தியாச வழக்கு

தன்னுடைய உண்மையான தாய் பிரபல இந்தி பாடகி அனுராதா பாட்வால் என்று கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய உண்மையான தாய் பிரபல இந்தி பாடகி அனுராதா பாட்வால் என்று கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கர்மலா மோடெக்ஸ். தற்போது அவருக்கு 45 வயதாகிறது. 1974ம் ஆண்டு தான் பிறந்தபோதே தன்னை பிரபல பின்னணி பாடகி அனுராதா பாட்வால் தத்து கொடுத்துவிட்டார். தன்னை அனுராதா பாட்வாலின் மகளாக அறிவிக்க வேண்டும் என்ற திருவனந்தபுரம் குடும்ப நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

anuradha-paudwal-01

பார்க்க அச்சு அசலாக அனுராதா போலவே உள்ள கர்மலா இது குறித்து கூறுகையில், “என்னுடைய தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறக்கும் தறுவாயில் நான் அவரது வளர்ப்பு மகள் என்றும், உண்மையான தாய் அனுராதா பாட்வால் என்று கூறினார். என்னுடைய வளர்ப்புத் தந்தை பொன்னச்சன் மகாராஷ்டிராவில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் பாடகி அனுராதாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நான் பிறந்தபோதுதான் அனுராதா பாட்வால் பின்னணி பாடகியாக முன்னேறிக்கொண்டிருந்தார். வளர்ச்சிக்குத் தடையாக இருப்பேன் என்று கருதியதால் என்னை என்னுடைய வளர்ப்புத் தந்தையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தாராம். பிறகு என்னுடைய வளர்ப்புத் தந்தை கேரளாவுக்கே வந்துவிட்டார். நான் வளர்ந்தது எல்லாம் கேரளாவில்தான். என்னுடைய தாய் அனுராதா பாட்வால் என்பது என்னுடைய வளர்ப்புத் தாய் ஆக்னஸுக்குக் கூட தெரியாது என்று என்னுடைய வளர்ப்புத் தந்தை தெரிவித்தார்.
இது குறித்து பாடகி அனுராதாவைத் தொடர்புகொண்டு பேச முயன்றேன். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்ந்து போன் செய்ததால் என்னுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டார். இதனால், சட்டப்பூர்வமாக அணுக முடிவெடுத்தேன்” என்று கூறியுள்ளார். கர்மலாவுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.