என்னவெல்லாம் நடந்தது தெரியுமா..? டி.டி.வி.தினகரன் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் புகழேந்தி..!

 

என்னவெல்லாம் நடந்தது தெரியுமா..? டி.டி.வி.தினகரன் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் புகழேந்தி..!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன், அதிமுக அமைச்சர்கள் முதல் இப்போது வரை நடந்தவற்றை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன், அதிமுக அமைச்சர்கள் முதல் இப்போது வரை நடந்தவற்றை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.  sasikala

இது குறித்து அவர் கூறுகையில், ‘’ 2017ஆம் ஆண்டு ஏப்ரல் சமயத்தில் டி.டி.வி.தினகரனை அமைச்சர்கள் சந்தித்தனர். அதன்பிறகு அமைச்சர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கச் சொல்லுவதாகக் கூறி தான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்துவிட்டார். நான் ஃபிளைட்டை பிடித்து டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு உடனடியாகச் சென்றேன். அவரிடம், ‘அரசியலில் இருந்து விலகினால் நன்றாக இருக்காது. உங்களுடைய தலைமையை ஏற்றுதான் அனைவரும் வந்து நிற்கிறோம். தயவு செய்து உங்களுடைய முடிவை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு கடவுள் ஒருநாள் வழிவிட்டால் வருகிறேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நானோ பிடிவாதமாக, நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும், எங்களை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.Sasikala

அதற்கு முன்பு பல வருடங்கள் அரசியலில் இல்லை. சின்னம்மா சொல்லித்தான் அவர் அரசியலுக்குள் வருகிறார். இதனைத்தான் அந்த வீடியோவிலேயே சொன்னேன். பல வருடங்களாக அரசியலில் இல்லாத டி.டி.வி.தினகரனை, அரசியலுக்கு அழைத்து வந்ததில் நான் முக்கியமான இடத்தைப் பெறுகிறேன் என்றுதான் நான் சொன்னேன். அது அவருக்கே தெரியும். இதில் என்ன தவறு நடந்துவிட்டது. நான் அரசியலிதான் இருந்தேன், புகழேந்தி பொய் சொல்கிறார் என்று டி.டி.வி.தினகரனால் சொல்ல முடியுமா?

தலைவரை அரசியலுக்கு அழைத்து வந்தீர்கள். ஆனால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் வரவில்லையே என்று கட்சிக்காரர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். எனக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடைபெறவில்லை. எனக்கே இந்த நிலைதான். உங்களுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று கூறினேன். இதில் எங்கே எடுக்க வேண்டுமோ அதனை எடுத்துவிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். திட்டமிட்ட சதியாகத்தான் இது உள்ளது. எதற்காக இப்படி செய்ய வேண்டும். எஞ்சியிருப்பதே நான் ஒருவன் மட்டும்தான். என்னையும் இழந்து இந்த கட்சி என்ன செய்யும்.

அமமுக நான் கண்ட இயக்கம். இந்த இயக்கத்திலிருந்து என்னை வெளியேறச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை டி.டி.வி.தினகரன் வெளியேறு என்று சொல்லமாட்டார். அமமுகவின் அங்கம் நான் என்ற நம்பிக்கையுடன் இந்த இயக்கத்தில் உள்ளேன். என்னை வெளியில் அனுப்ப வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்காது என நினைக்கிறேன். என்னை இழந்தால் கட்சிக்கு இழப்பு என்பது அவருக்கும் தெரியும். ஆகவே காலம் பதில் சொல்லும்.pukazhenthi

ஒரே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் 8 பேரை நீக்குவதாக அம்மா முடிவெடுத்துவிட்டால் அன்று அவருக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம். பூங்குன்றனிடம் மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்கள் குறித்த பட்டியல் கேட்பார். அவர் ஒரு 10 பேரின் பெயரைச் சொன்னால், அவர்கள் குறித்து தலைமை கழகத்திலிருந்தோ, அமைச்சர்கள் மூலமாகவோ விசாரிக்கச் சொல்வார். யார் மீது தவறு உள்ளதோ அவரை நீக்கச் சொல்லிவிடுவார். இதுதான் நிர்வாகம். இதனை டி.டி.வி.தினகரன் செய்யமாட்டேன் என்கிறாரே. அனுபவமில்லாத பழனியப்பன் எல்லாத்துக்கும் ஆம் என்று சொல்லக்கூடிய சிலர். இதுதான் என்னுடைய குமுறல். இதனை வெளியில் சொல்லக்கூடிய நிர்பந்தம் தற்போது ஏற்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.