‘என்னது.. 8 ஆம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வா’? : கல்வித்துறையின் சுற்றறிக்கையால் குளறுபடி!

 

‘என்னது.. 8 ஆம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வா’? : கல்வித்துறையின் சுற்றறிக்கையால் குளறுபடி!

அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் உட்படப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

 நடப்பாண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனால், அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் உட்படப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு இருக்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

 அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி கடந்த மார்ச் 3 ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில், 8 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் முதல் 10ம் தேதி வரை “பொதுத்தேர்வு” இருக்கிறது என்றும் அதற்கான தேர்வு மையங்களின் பட்டியலைத் தாயார் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அனைத்து கல்வி அலுவலர்களையும் குழப்பமடையச் செய்தது. இது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் கேள்வி எழுப்பினார். 

ttn

அதற்கு கல்வித்துறை, தனித்தேர்வு என்ற இடத்தில் பொதுத்தேர்வு என்று தவறாக வெளியிடபட்டுள்ளது. அதனால் புதிய அறிக்கை இன்று வெளியாகும் என்று கூறி மழுப்பியுள்ளது. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அறிக்கையில் தொடர்ந்து கல்வித்துறை குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனி கவனமாகச் செயல்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.