என்னது ரூ 1.17 கோடிக்கா ஜெயலலிதா இட்லி சாப்ட்டாங்க? கலாய்க்கும் நெட்டிசன்கள்

 

என்னது ரூ 1.17 கோடிக்கா ஜெயலலிதா இட்லி சாப்ட்டாங்க? கலாய்க்கும் நெட்டிசன்கள்

என்னது ஜெயலலிதா 75 நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டாரா”? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் தொண்டர்களுக்கோ, ஊடகங்களுக்கோ அவரது உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது, அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்ற எந்த தகவலுமே வெளியிடப்படவில்லை. 

ஆனால் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கிறார் என அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர். இதனால் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என தொண்டர்கள்  உட்பட பலர் நினைத்திருந்த வேளையில்ன்அவர் உயிரழந்துவிட்டதாக அதே ஆண்டுடிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அவரது மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு விவரங்களை அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வழங்கியுள்ளது. அதில், மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவாகியது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கு ரூ 1.17 கோடி செலவாகி இருக்கிறது என அப்போலோ நிர்வாகம் கூறியிருப்பதை, ”என்னது ஜெயலலிதா 75 நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டாரா”? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.