என்னது… பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தேன் அடையா…

 

என்னது… பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தேன் அடையா…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் யாரு என்பதை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் யாரு என்பதை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். 

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது. கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. 

jangiri

இந்த நிலையில், பிக் பாஸ்3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கும் , உதவி இயக்குநர் மோசஸ் ஜோயலைத் திருமணம் நடைபெற்றது. 

madhumitha

இது குறித்து மதுமிதாவின் நெருக்கிய நண்பர் பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணம் நடைபெற்று இன்னும் 6 மாதம் கூட முடியல அதுக்குள்ள எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சில மதுமிதா பங்குபெறுவார் என்று கேள்வி கேட்கப்பட்டது? அதற்கு பதிலளித்த மதுமிதாவின் நண்பர், ‘மதுமிதாவிற்கு சவால்னா ரொம்ப பிடிக்கும். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க.இது போன்ற வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’ என்று கூறியுள்ளார்.