என்னது நான் கர்ப்பமா?: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா ஷர்மா!

 

என்னது நான் கர்ப்பமா?: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா ஷர்மா!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு டிச.11ம் தேதி இத்தாலி நாட்டின் மிலன் நகர் அருகே டஸ்கேனி எனும் இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

viratanushka

விராட்-அனுஷ்காவிற்கு திருமணமாகி ஒராண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவின. இது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அனுஷ்கா தனது கர்ப்பம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அனுஷ்கா, ஒருவர் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதை மறைக்க முடியும், கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியும்? இது போன்று யாராவது வீண் வதந்தியை கிளப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். இதையெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

viratanushka

மேலும், நடிகைகள் பலரும் இதுபோன்ற வதந்திகளை கடந்து வர வேண்டி தான் உள்ளது. ஒரு நடிகை கர்ப்பமாவதற்கு முன்பே தாயாக்கிவிடுகிறார்கள், ஏன் கல்யாணத்துக்கு முன்பே நடிகை தாயாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இதுபோன்று அர்த்தமற்ற வதந்திகளை எப்படி தான் யோசித்து பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்று அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.