என்னது நான் ஆன்டியா? கலாய்த்த நெட்டிசன்கள்; கடுப்பான கரீனா கபூர்

 

என்னது நான் ஆன்டியா? கலாய்த்த நெட்டிசன்கள்; கடுப்பான கரீனா கபூர்

சமூக வலைதளங்களில் ஆன்டி என்று அழைக்கப்பட்டதற்கு நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.

மும்பை: சமூக வலைதளங்களில் ஆன்டி என்று அழைக்கப்பட்டதற்கு நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் சோனாக்‌ஷி சின்ஹா, சோனம் கபூர், கபில் சர்மா, கரன் ஜோஹர், கரினா கபூர் ஆகியோர் கலந்து கொண்ட வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் நடிகர் அர்பாஜ் கான் தொகுப்பாளராக உள்ளார். இதில்  பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் மீது சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்து வருகின்றனர்.

kareena ttn

இந்நிலையில், நடிகை கரீனா கபூரிடம் தொகுப்பாளர் அர்பாஜ் கான், சமூக வலைதளத்தில் ‘நீங்கள் இப்போது ஆன்டி, இளம்பெண் போல நடிக்க வேண்டாம்’ என ரசிகர் ஒருவர் பதிவிட்ட பதிவை காண்பித்தார். இந்த பதிவை கண்டு முதலில் சிரித்த கரீனா கபூர், ‘ பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள். பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த உணர்ச்சிகளும் இல்லை என்று நினைக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் ’ என்று கூறியுள்ளார்.

kareena

திரை பிரபலங்கள் என்றாலே அவர்கள்  மீது  நம் விமர்சனத்தைத் திணிக்கலாம் என்ற மக்களின் மனநிலை மாறவேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.