என்னது தேவராட்டம் இத்தனை கோடி வசூலா?; அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

 

என்னது தேவராட்டம் இத்தனை கோடி வசூலா?; அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

வக்கீலுக்கு படிச்சவன்தான் சண்டை போடனும்னு டிரெய்லரில் வந்த வசனமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

நெட்டிசன்களின் கடும் விமர்சனத்துக்கு இடையே வெளியான கவுதம் கார்த்தியின் தேவராட்டம் திரைப்படம் 5 நாட்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

manjima

முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தேவராட்டம். இது சாதிய  பெருமை பேசும் படம் என நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. வக்கீலுக்கு படிச்சவன்தான் சண்டை போடனும்னு டிரெய்லரில் வந்த வசனமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

devar

ஆனால் விமர்சனங்களை கடந்து கவுதம் கார்த்தி படங்களில் இதுதான் பெரிய ஓப்பனிங் என பெயர் பெற்றுள்ளது. மே 1-ஆம் தேதி வெளியான தேவராட்டம் படத்தின் வசூல் 5 நாட்களில் 6.5 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

devar

நெட்டிசன்களின் விமர்சனத்த பார்த்துட்டே படத்துக்கு போனவங்க எக்கச்சக்கமாம்! இப்பலாம் சர்ச்சை கிளப்பிவிட்டு படத்த சக்ஸஸ் பண்றது ஒரு பார்முலா ஆகிப்போச்சு. தேவராட்டம் வசூல பத்தி கேள்விப்பட்ட நெட்டிசன்கள் ஷாக்ல இருக்காங்க.