என்னது தக்காளியா? அடேய் அது தக்கலைடா…அரசு பேருந்து பயணசீட்டில் நடந்த பிழையால் வைரலாகும் மீம்ஸ்!

 

என்னது தக்காளியா? அடேய் அது தக்கலைடா…அரசு பேருந்து பயணசீட்டில் நடந்த பிழையால் வைரலாகும்  மீம்ஸ்!

அதற்கு எல்லாம் தலைவனாக நம்ம வடிவேலு தான் உள்ளார். இந்த முறையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட மாதிரி போக்குவரத்துக் கழகம் சிக்கியுள்ளது. 

தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலை கொடுப்பதற்கு என அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் பல கண்டெட்டுகளை அள்ளிக்கொடுத்து அவர்களை வாழவைத்து வருகிறார்கள். அதற்கு எல்லாம் தலைவனாக நம்ம வடிவேலு தான் உள்ளார். இந்த முறையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட மாதிரி போக்குவரத்துக் கழகம் சிக்கியுள்ளது. 

மதுரை அரசுப் போக்குவரத்து பணிமனை போடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் அரசு பேருந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மில்டன் என்ற பயணி ஒருவர் மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு  செல்ல பயணசீட்டு வாங்கியுள்ளார். நடத்துநர்  கொடுத்த அந்த மின்னணு பயண சீட்டில் தக்கலை  என்ற ஊரின் பெயருக்கு பதிலாக தக்காளி  அச்சடிடப்பட்டிருந்தது. 

ttn

இதை கண்ட மில்டன் அதை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதை கண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள்  போக்குவரத்து கழகத்தின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு   தக்கலை என்ற பெயரை ஆங்கிலத்தில் ‘THUCKALAY’ என எழுதுவதால் சிலர் ‘துகளை’ என்றும் ‘துக்களை’ என்றும் உச்சரித்து தமிழில் எழுதி வருகின்றனர். எனவே தக்கலை என்பதை ஆங்கிலத்தில் ‘THAKKALAI’ என்று மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்ததையடுத்து அதில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வெளியான பயணசீட்டில்  ‘A’ விடுபட்டதால் தக்கலை, தமிழிலும், ஆங்கிலத்திலும் தக்காளி ஆகியுள்ளது. இதை சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துடன் மாற்றம் செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.