என்னது சூடான டீ குடிச்சா இந்த நோய் வருமா? அதிர்ச்சி கிளப்பும் ரிப்போர்ட்!?

 

என்னது சூடான டீ  குடிச்சா இந்த நோய் வருமா? அதிர்ச்சி கிளப்பும் ரிப்போர்ட்!?

தேநீர்  என்றாலே அது நம்மில் பல பேருக்கு புத்துணர்ச்சி பானமாக தான் உள்ளது.

தேநீர்  என்றாலே அது நம்மில் பல பேருக்கு புத்துணர்ச்சி பானமாக தான் உள்ளது. அதனால் தான் தேநீர் இல்லாமல் பல பேர் காலைப் பொழுதைத் தொடங்குவதே இல்லை. அதுவும் சூடான டீ என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால்  சூடான டீ குடிப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக  இன்டர்நெஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் என்ற புத்தகத்தில் 75 டிகிரி செல்சியஸிற்கு மேல் அடிக்கடி டீ குடித்தால் அது ஆபத்தானது என்று தெரிவித்திருக்கிறது. 

tea

ஒவ்வொரு நாளும் 700மிலி சூடான டீ குடிக்கும்  40லிருந்து 75 வயது வரை உள்ள 50,045 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 90% பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.  இந்த ஆய்வு முடிவு இதே போன்று காபி, ஹாட் சாக்லேட் மற்றும் சூடாகக் குடிக்கும் அனைத்துவித பானங்கள் குடிப்பவர்களுக்கும் வருவதாகச் சொல்கிறது.

tea

இதற்காக நாம் தேநீர் அல்லது காபியை குடிக்கும் பழக்கத்தை விடவேண்டாம். தேநீரை அடுப்பிலிருந்து இறக்கிய 5 அல்லது 7 நிமிடங்களுக்கு பிறகு டீயை குடித்தால் இது போன்ற பாதிப்புகள் வராது. மேலும் இப்படி நாம் குடிப்பதனால் உணவு குழாய்களை நாம் பாதுகாக்க முடியும். 

hot

உணவுக்குழாய் புற்றுநோய் இந்தியாவில் ஆறாவது இடத்தையும், உலக அளவில் எட்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. ஆண்களைவிட பெண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. அதனால் டீ மட்டுமல்ல எந்த உணவாக இருந்தாலும் 4-5 நிமிடம் ஆறவைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ பழகுங்கள்.