என்னது சிறுபிள்ளைத்தனமா இருக்கு? வடிவேலு மாதிரியே குப்புற விழுந்த பிரபல நடிகை! கொண்டாட்டத்தில் பாஜக!

 

என்னது சிறுபிள்ளைத்தனமா இருக்கு? வடிவேலு மாதிரியே குப்புற விழுந்த பிரபல நடிகை! கொண்டாட்டத்தில் பாஜக!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..! என்று நடிகர் கவுண்டமணி பேசிய வசனங்கள் காலங்களைக் கடந்தும் மக்கள் மனதில் நிற்கிறது! ஒவ்வொரு தேர்தலின் போதும், மதுரையில கூப்பிட்டாக… டெல்லியில கட்-அவுட் வைக்கிறாக… ஆந்திராவுல பாலாபிஷேகம் செய்தாக.. என்று அரசியல் கட்சிகளுக்கு நடிகர் நடிகையர்கள் நூல் விட்டு பார்ப்பார்கள். சினிமாக்காரர்களுக்கும் அரசியல் கட்சிகள் தூது விட்டு  பார்க்கும். பரஸ்பரம் சில, பல லட்சங்களிலும், கோடிகளிலும் பேரம் துவங்கும். ஜெயித்த பிறகு அந்த நடிகர், நடிகையரைக் கண்டுக் கொள்ளாத கட்சிகளும் உண்டு. தோற்று விட்டால், அவர்களை அவமானப்படுத்தி வெளியே துரத்தி விடுகிற கட்சிகளும் உண்டு.

urumila

தமிழ் சினிமாவின் சிம்மாசனத்தில் வீற்றிருந்த அப்படி ஆசைப்பட்டு பிரச்சாரம் செய்யப் போனதினால் தான் இன்று வரையில் குப்புறப்படுத்து எழுந்திருக்கவே முடியாமல் உள்நீச்சல் அடித்து வருகிறார். இதில் மச்சான்களைக் கவர்வதற்காக களத்தில் குதித்த நமீதாக்களை எல்லாம் எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?

rahul

இது தலைநகரில் நடந்த பரிதாபம். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி முன்னிலையில், கடந்த மார்ச் 27-ஆம் தேதி காங்கிரசில் இணைந்தார் ரங்கீலா… ரங்கீலா என்று நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஊர்மிளா மடோன்கர். ஆமாம்… ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு ஜோடி போட்ட அதே ஊர்மிளா தான். கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே, பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். இந்நிலையில், நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்கான காரணமாக அவர் கூறுகையில், “மும்பை காங்கிரஸில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் என்னால் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். சினிமாவை விட அரசியல்ல உள்குத்து விவகாரம் அதிகமாக இருக்கும் என்று இப்போது தெளிந்திருப்பார் ஊர்மிளா.