என்னது சமஸ்கிருதம் தான் உலக அறிவின் ஆதாரமா? மத்திய அமைச்சரை தெறிக்க விட்ட மதுரை எம் .பி!

என்னது சமஸ்கிருதம் தான் உலக அறிவின் ஆதாரமா? மத்திய அமைச்சரை தெறிக்க விட்ட மதுரை எம் .பி!

மதுரை பாராளுமன்ற உறுப்பினரும்,சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இன்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரை கதிகலங்க வைத்திருக்கிறார். ஏற்கனவே சமஸ்கிருதம் கற்றால்,சுகர் வராது,கொலஸ்ட்ரால் வராது என்று காமெடி செய்து கொண்டிருக்கும் பிஜேபி கட்சி அமைச்சர்களும்,மந்திரிகளும் இன்னும் ஒருபடி மேலே போய் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம்.அதுதான் உலக அறிவின் தாய் என்று பேச, சு.வெங்கடேசன் அமைச்சரின் தவறான பேச்சை சுட்டிக்காடி அமைச்சரை தெறிக்கவிட்டார்.

vekatesan

பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் பேசும் போதி அறிவியல் ஆதாரத்துடன் பேட வேண்டும்.சமஸ்கிருதம் இந்தியாவின் மூத்த மொழி என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்ட வெங்கடேசன், இதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள்  மட்டுமே 60,000 !.ஆனால் சமஸ்கிருதத்தில் கல்வெட்டுகளின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டுமே என்று சுட்டிக் காட்டினார்.

venkatesan

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகளில் பழைமையானவை ராஜஸ்த்தான் மாநிலத்தின் அத்திப்பாரா கல்வெட்டுகளும்,குஜராத்தின் ஜூனாகட் கல்வெட்டுகளும்தான்,அவற்றின் காலம் கி.பி 100!.ஆனால் மதுரை மாங்குளத்திலும் ,தேனி புலிமான் கோம்பையிலும் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் காலம் கி.மு 700!.ஆகவே இந்தியாவின் அடையாளமாக சமஸ்கிருதத்தை முன் வைத்தால் , அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழ் குரலாகத்தான் இருக்கும் என்றார்.