என்னது அதிமுகவுடன் இணைவோமா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை: டிடிவி தினகரன் அதிரடி

 

என்னது அதிமுகவுடன் இணைவோமா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை: டிடிவி தினகரன் அதிரடி

அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்: அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தினகரன் அதிமுக தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவில் இணைய வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும். மேலும் தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இந்நிலையில், இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராம்தாஸ் அத்வாலே போன்றவர்கள் தங்கள் விருப்பத்தை சொல்கிறார்கள். அவர்கள் நினைப்பதெல்லாம் ஒரு போதும் நடக்காது. அதிமுக-வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பாஜகவுடன் கூட்டணியும் சேரமாட்டோம் என்றார்.