என்னடி சைட் அடிக்க கெளம்பிட்டியா? கவினை வைத்து லாஸ்லியாவை கலாய்த்த மதுமிதா

 

என்னடி சைட் அடிக்க கெளம்பிட்டியா? கவினை வைத்து லாஸ்லியாவை கலாய்த்த  மதுமிதா

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது  புரொமோ  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது  புரொமோ  வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதமாகியுள்ளது. இந்த வாரம்  லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக கடந்த இரண்டு நாட்களாக  பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்ற இரு கிராமங்களாக ஹவுஸ்மேட்ஸ்  பிரிக்கப்பட்டு ஆளுக்கொரு கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். 

 

நேற்றைய போட்டியில் சாண்டி  – மதுமிதா சண்டை , சேரன் – ரேஷ்மா தகராறு என பிக் பாஸ் வீடு பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ  தற்போது வெளியாகியுள்ளது. அதில், மதுமிதா -ரேஷ்மா உள்ளிட்ட சிலர் சேர்ந்து கொண்டு, லாஸ்லியாவை எங்கல போற சைட் அடிக்க கெளம்பிட்டியா, அந்த பையனுக்கு ஆப்பு வைக்காம விடமாட்ட..ஏற்கனவே அவனுக்கு ரெண்டு மூணு ஆப்பு வைச்சிட்டியே என்று கேட்க, அதற்கு லாஸ்லியா வழக்கம் போல் சிரிக்கிறார். பின்பு கவினிடம் சென்று என் மேல பழிபோடுறாங்களே என்று சொல்ல, அதற்கு கவினோ, அவதான் வந்த அன்னைக்கே சொல்லிட்டால நான் யாருக்கும் தெரியாம சைட் அடிப்பேன்னு, இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சி போயிடுச்சி அவ்வளவுதான்’ என்கிறார். 

 

ஏற்கனவே சாக்ஷி – கவின் – லாஸ்லியா என முக்கோண காதல் கதை ஓரளவுக்கு அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் அதை கிளப்பிவிடும் வேலையில் இறங்கியுள்ளார் மதுமிதா என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.