என்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை!!

 

என்னடா இது தலைவர் ரஜினிக்கும், தல அஜித்துக்கும் வந்த சோதனை!!

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர் ஒன்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது

சேலம்: பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர் ஒன்றின் சார்பில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான  பேட்ட, தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் கடந்த 10-ம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

ஹாஸ்டல் வார்டனாக தலைவர் நடித்துள்ள பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினியின் அருணாசலம், அஜித்தின் ராசி ஆகிய படங்கள் 3 நாள் இடைவெளியில் மோதின. ஆனால், முதல் முறையாக ரஜினி, அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூல் உள்ளிட்டவற்றில் போட்டி போட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஏராளமான தியேட்டர்களில் இன்றளவும் பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஹவுஸ்ஃபுல் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், சேலத்தில் உள்ள கைலாஷ், பிரகாஷ் ஆகிய திரையரங்குகளில் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஓடி வருகிறது. படம் வெளியாகி 10-வது நாளான நேற்று ஒரே காம்பிளக்ஸில் உள்ள இந்த தியேட்டர்கள் சார்பில் பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

pettaviswasam

அதில், மரண மாஸ் பேட்ட 10-வது நாள் என்றும், குடும்பங்கள் கொண்டாடும் அரங்கம் நிறைந்த 15-வது நாள் விஸ்வாசம் என்றும் குறிப்பிடப்பட்டு அடுத்தடுத்து ஒட்டப்பட்டுள்ளது. ஒரே நாளில் வெளியான இருபடங்களின் போஸ்டர்களில் விஸ்வாசம் மட்டும் எப்படி 15-வது நாளில் ஓடிக் கொண்டிருக்கும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

முன்னதாக, தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூல் சாதனையை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், பேட்ட படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

தற்போது, இந்த போஸ்டர்களை வைத்து, ஒருவேளை 5 நாள்கள் அதிகமாக ஓடி விட்டதால் தான் என்னமோ ‘விஸ்வாசம்’ வசூலில் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டதோ எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.