“என்ஜாய் செய்ய யாரும் கோவாவுக்கு வராதீர்கள்!” – முதல்வர் பிரமோத் சாவந்த்

“என்ஜாய் செய்ய யாரும் கோவாவுக்கு வராதீர்கள்!” – முதல்வர் பிரமோத் சாவந்த்

ஒரு மாதத்திற்கு பிறகு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்கள் அம்மாநிலத்தில் உள்ள மட்கான் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

சிறப்பு ரயில்கள் அல்லது விமானங்களில் கோவா மாநிலத்திற்குச் செல்லும் மக்கள் கோவாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ttn

டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று (மே 15-ஆம் தேதி) இயக்கப்பட உள்ளது. அந்த ரயில் மே 16-ஆம் தேதி மட்கான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால் கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக கோவாவில் உள்ள இந்த ரயில் நிலையத்தில் அந்த சிறப்பு ரயில் நிறுத்த வேண்டாம் என்று மத்திய ரயில்வேக்கு கோவா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “720 பேர் மட்கானில் இறங்குவதற்காக ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் யாரும் கோவாவை சேர்ந்தவர்கள் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். மகிழ்ச்சியாக நாட்களை கழிக்க யாரும் கோவா வர வேண்டாம்” என்று அவர் கூறினார்.