‘என்கிட்ட திறமை இருக்கு சார்…கண்டிப்பா ஜெயிப்பேன்’ : அம்பானி ரேஞ்சுக்கு டயலாக் அடித்து தலைசுற்றவைத்த கொள்ளையன் முருகன்

 

‘என்கிட்ட திறமை இருக்கு சார்…கண்டிப்பா ஜெயிப்பேன்’ : அம்பானி ரேஞ்சுக்கு டயலாக் அடித்து தலைசுற்றவைத்த கொள்ளையன் முருகன்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது ஏற்கனவே பல வழக்குகள்  தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரியில்  13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் என்பவர் சமீபத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே மணிகண்டன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது ஏற்கனவே பல வழக்குகள்  தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது. கூட்டாகச் சேர்ந்துசெய்து வந்த இந்த கொள்ளையில்  தனக்கு வந்த பங்கை  சினிமா துறையில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அதிலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும்  தெரியவந்தது.

lalitha

பெங்களூரூவில் சரணடைந்ததால் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கொள்ளையடித்த நகைகளை கொள்ளிடம் ஆற்றங்கரையில்  புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பெங்களூரு காவல் துறையினர் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி போலீசார், இவர்களை பெரம்பலூர் அருகே வழிமறித்ததோடு, மீட்கப்பட்ட நகைகள் குறித்த தகவலை  நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர். 

lalitha

இதையடுத்து திருச்சி காவல் துறையினர் கொள்ளையன் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட குற்றவியல் இரண்டாவது மாஜிஸ்ட்ரேட் திரிவேணி அனுமதியளித்தார்.  இதையடுத்து உரிய அனுமதியுடன் பெங்களூருவிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தார் முருகன். 

இந்நிலையில் திருச்சி காஜாமலை அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில்  மாஜிஸ்ட்ரேட் முன்பு முருகன் இன்று அதிகாலை ஆஜர்படுத்தப்பட்டு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில்,   திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

lalitha

  இதனிடையே மாஜிஸ்ட்ரேட் முன்பு பேசிய முருகன்,  எனக்கு நிறைய திறமை இருக்கு, நான் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்பேன்.  நான் ஒரு நல்ல படத் தயாரிப்பாளர்.  எனக்கு சிறை அனுபவம் நிறைய இருக்கு’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.  முருகனை திருச்சி போலீசார் காவலில் எடுக்கும்பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.